பழனி முருகன் கோவில் சிலை மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

 

பழனி முருகன் கோவிலில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.பழமையான சிலைகள் கடத்தப்படுவது குறித்து விசாரிப்பதே சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் பணி என்றும், பழனியில் சிலை செய்வதிலேயே மோசடி நடைபெற்றிருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல்-02

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் உள்ள உற்சவர் சிலை   செய்ததில் மோசடி நடைபெற்றுள்ளது. 200 கிலோ எடை கொண்ட, ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலையில், சிறிதளவு கூட தங்கம் இல்லை என்பதும், பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.  இந்த மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, அப்போதைய கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜாவையும்,  ஸ்தபதி முத்தையாவையும், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த சிலை முறைகேடு வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கு இல்லை என்பதாலும், புதிய சிலை செய்வதில் மோசடி தொடர்பான வழக்கு என்பதால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழமையான சிலைகள் கடத்தப்படுவது குறித்து விசாரிப்பதே சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் பணி என்றும், பழனியில் சிலை செய்வதிலேயே மோசடி நடைபெற்றிருப்பதால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts