பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 863 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 863 கன அடியாக அதிகரித்துள்ளது.  

ஈரோடு : மே-26

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 794 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஆயிரத்து 863 கனஅடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 150 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 51 புள்ளி பூஜ்ஜியம் 2 அடியாகவும், நீர் இருப்பு 4.6 டிஎம்சியாகவும் உள்ளது.

இதேபோல், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2491 கனஅடியில் இருந்து 2908 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 33.76 அடியாகவும், நீர்இருப்பு 9.10 டிஎம்சி.,யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக, அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Posts