பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீரை திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தென்மேற்கு பருவமழை அதிகரித்ததை தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தானது அதிகரித்தது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து இன்று முதல்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, சிவ சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர்,மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 2300 கனஅடி வரை அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts