பாகிஸ்தானின் கருத்து: இந்தியா மறுப்பு

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஏப்ரல் 16, 20 ஆகிய தேதிகளுக்கு இடையே பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக நம்பகத்தக்க உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளது என்றார்.

இதையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு பதிலளிக்கும் வகையில் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், குரேஷியின் பொறுப்பற்ற, அபத்தமான கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இது இந்தியாவில் தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுப்பது போல் இருப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. 

முன்னதாக, காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி இந்திய விமானப் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி அழித்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. 

Related Posts