பாகிஸ்தானின் காய்கறிச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரத்தில் ஹசர்கஞ்சியில் உள்ள காய்கறிச்சந்தையில் இன்று அதிகாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

அதில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 30 பேர் காயமடைந்திருக்க கூடும் என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை சுற்றியுள்ள கட்டடங்களும் பாதிப்படைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts