பாகிஸ்தானில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 65 பேர் பலி

 

 

பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால், கடந்த 3 நாட்களில் சுமார் 65பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  இதையடுத்து, பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கராச்சி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Related Posts