பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி : மோடி

புல்வாமா தாக்குதல் மூலம் மிகப்பெரிய தவறை செய்துள்ள பாகிஸ்தானுக்கு இந்தியா மிகப் பெரிய பதிலடிகொடுக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம்  பேசிய மோடி இதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மோடி, பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றுஇந்திய மக்களின் ரத்தம் கொதிப்பதாகவும், பயங்கரவாதத்தை வேரறுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடாதுஎன்ற பிரதமர்,  புல்வமா தாக்குதல் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும்,. இந்ததாக்குதலுக்குக் காரணமான எதிரிகளுக்கு தக்க பதிலடித் தரப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். பாகிஸ்தான் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாதத் தாக்குதலை கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட மோடி,  வேற்றுமைகளை மறந்து எதிரிகளை அழிக்க வேண்டும் என்றார்.

 

Related Posts