பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய பயங்கரவாதிகள்

அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதிகள் திரும்பியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

1980-களில் சோவியத் ரஷ்யா ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை மீட்க முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தான் அளித்த பயிற்சிக்கு அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி செய்ததாக அவர் கூறியுள்ளார்.  தற்போது, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால்,  பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்களை பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா கூறுவது மிகப்பெரிய முரணாகும் என்று அவர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் இந்த பிரச்சினையில் நடுநிலை வகித்து இருக்க வேண்டும் என கருதுவதாக குறிப்பிட்டுள்ள இம்ரான்கான், இந்த விஷயத்தில் தலையிட்டதால், அந்த குழுக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறியுள்ளார். பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70 ஆயிரம் பேரையும் 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் வெற்றி பெறாததற்கு தாங்களை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்றும் கூறியுள்ளார்.

Related Posts