பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்

வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்புக்கான சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,. தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அவர் கூறினார். தீவிரவாத தாக்குதலை தடுக்க அனைத்து நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் எடுக்கும் என்று தெரிவித்த ஜெட்லி,  தீவிரவாத தாக்குதலை நடத்தியவர்களுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று கூறினார். உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்துவிட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளதாகவும்   ஜெட்லி தெரிவித்தார். உயிரிழந்த வீரர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற அருண் ஜெட்லி வர்த்தக ரீதியிலான சலுகைகள் இனிமேல் பாகிஸ்தானுக்கு வழங்கப்படாது என்றார்.புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையை கொடுப்பார்கள் என அவர் உறுதிபட தெரிவித்தார்.

 

Related Posts