பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான மிர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 8 ஆக நில அதிர்வு பதிவானது. நிலநடுக்கத்தால் மிர்பூர் பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்தன. ஜீலம் ஆற்றையொட்டி அமைந்த குடியிருப்பு பகுதிகளில் ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்தது. சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததால் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

Related Posts