பாகிஸ்தான் ஒருபோதும் போரை தொடங்காது

பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் போரை தொடங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது. காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கருத்து தெரிவித்தன. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவுடன் போரை தொடங்காது என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். லாகூரில் சீக்கிய இன மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே அணு ஆயுதங்கள் உள்ள நாடுகள் என்றும், இந்த இரண்டு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்தால் உலகமே அபாயத்தை எதிர்க்கொள்ளும் எனவும் கூறினார். எந்த பிரச்னைக்கும் யுத்தம் ஒரு தீர்வாகாது என்று அவர் குறிப்பிட்டார். போர் ஏற்பட்டால் அது பல புதிய பிரச்னைகளுக்கு காரணமாக அமையும் எனவும் இம்ரான்கான் தெரிவித்தார்.

Related Posts