பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை மாதம் தேர்தல் நடத்தப்படும்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை மாதம் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் : மே-27

கடந்த 2013 முதல், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி  ஆட்சி செய்து வரும் நிலையில், பிரதமர் பதவியிலிருந்த நவாஸை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்தது. இதனிடையே அந்நாட்டு ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அந்நாட்டு பிரதமர் அப்பாஸி, எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷாவுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிபர் மம்னூன் ஹூசைனுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, ஜூலை மாதம் 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில் நவாஸ் கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெரீக் இன்ஸாப் கட்சிக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts