பாகிஸ்தான் படையினரை விரட்டியடித்த இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் படையினரை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஹிஜாப்பூர் பகுதியில் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சியை தடுத்த இந்திய ராணுவத்தினர், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அதே பகுதியில் மீண்டும் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்ட பாகிஸ்தான் வீரர்களின் முயற்சியை, இந்திய ராணுவம் அதிரடியாக செயல்பட்டு முறியடித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில், அப்பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts