பாகிஸ்தான் பற்றி மோடி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்துள்ளேன்:  ப.சிதம்பரம் 

மக்களவைத் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மோடியின் பிரசாரம் தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்து விட்டதாகவும், தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன்பாவது, பிரதமர் மோடி முக்கியமான மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் இப்போது வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சினைகள் எனவும்  இது குறித்து பிரதமர் பேசாமல் அமைதியாக இருப்பது குறித்து அவர் வினவியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரம், குழப்பம் நிறைந்த ஜிஎஸ்டி, சிறு குறு தொழில்களின் அவலநிலை குறித்து, பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்கள், குறிப்பாக பாஜகவைச் சேர்ந்தவர்களின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக பிரதமர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். .

Related Posts