பாகிஸ்தான் பொறுப்பில்லாத அண்டை நாடு : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தான் பொறுப்பில்லாத அண்டை நாடாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார்.

மாஸ்கோ சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அந்நாட்டு அமைச்சர் செர்கின் லாவுரோவுடன் காஷ்மீர் விவகாரம், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஜெய்சங்கர், பாகிஸ்தானுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ள தொடர்ந்து இந்தியா போராடி வருவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் புரிவதற்கும் பாகிஸ்தான் தடையாக இருப்பதாக அவர் கூறினார். இந்தியாவின் மீது பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஏவி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இன்று உலகில் வேறு எங்கும் அண்டை நாட்டின் மீது தீவிரவாதத்தை ஏவுகிற ஒரு நாட்டை காணமுடியாது என்றும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என்றும் அவர் ஜெயசங்கர் குற்றம்சாட்டினார்.

Related Posts