பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு பணியாளர்களால் கையாளப்பட்ட 103 கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ளது


காஷ்மீர் மாநில உரிமைகள், இந்திய அரசின் செயல்பாடு மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் தொடர்பாக அவதூறான தகவல்களும், கருத்துகளும் தற்போது பாகிஸ்தானில் இருந்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக அதிகமாக பகிரப்படுகின்றன.

பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் பேஸ்புக் குழுக்களில் பரப்பப்படும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபகாலமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து போலியான பெயர்களில் தொடங்கப்பட்ட இதுபோன்ற சில கணக்குகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப்பிரிவுடன் (ISPR) தொடர்பு கொண்டிருப்பது கண்காணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தகைய போலி கணக்குகளில் சிலவற்றை சுமார் 28 லட்சம் பேர் பின்தொடர்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்த 24 பக்கங்கள், 57 பேஸ்புக் போலி கணக்குகள் மற்றும் 15 இன்ஸ்டாகிராம் கணக்குகள் என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவுடன் தொடர்புடையை 103 கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத்துறையின் தலைவர் நாதனியல் கிலெய்செர் தெரிவித்தார்.

Related Posts