பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும், சில வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Related Posts