பாகிஸ்தான் விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்ப படையினர் சுட்டு வீழ்த்தினர்

பாகிஸ்தானின் ஆள் இல்லாத விமானம் ஒன்று. பஞ்சாப் மாநிலம், தர்ன்தாரன்  மாவட்டம்  கெம்கரண் பகுதியில்ஊடுருவியது. அதனை ராடார் மூலம் கண்டறிந்த இந்திய எல்லைப் பாதுகாப்பு விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் அதனை சுட்டு வீழ்த்தினர். இருப்பினும், அந்த ஆள் இல்லாத விமானம்  இந்திய எல்லைக்குள் அல்லது பாகிஸ்தான் எல்லைக்குள்  விழுந்ததா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து ஊராட்சித் தலைவர் லக்பீர்சிங்கூறுகையில்  துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை கண்டதாக கூறினார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு, இந்திய விமானப்படையின் சுகாய்-30 மற்றும் மிரேஜ் 2000 போர் விமானங்கள் பஞ்சாப் எல்லையில் நெருங்கிய நான்கு பாகிஸ்தானிய எப்-16 விமானங்களைத் துரத்தியடித்தன. .பாகிஸ்தானிய போர் விமானங்கள் கண்காணிப்பு  விமானத்தை அனுப்பி இருக்கலாம் எனவும்,  எல்லைப் பகுதிகளில் இந்தியத் துருப்புக்களை நிறுத்துவதைக் கண்டறிவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Posts