பாசனத்துக்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ள நிலையில், பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை எட்டி உள்ளது. விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 10ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.அணையின் நீர்இருப்பு 81.டி.எம்.சி.யாக உள்ளது.

இதனிடையே, ஒகேனக்கல் பகுதிக்கு 29ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீரின் அளவு, 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. வெள்ளப் பெருக்கு நீடிப்பதால், பரிசல்களை இயக்க பத்தாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Posts