பாஜகவின் அடக்குமுறை ஆட்சியினால், நாட்டில் அறிவிக்கப்படாத மறைமுக அவசரநிலை நிலவுகிறது – யஷ்வந்த் சின்ஹா

பாஜகவின் அடக்குமுறை ஆட்சியினால், நாட்டில் அறிவிக்கப்படாத மறைமுக அவசரநிலை நிலவுவதாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அசாதாரணமான சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது என்றார். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினால், அவர்களை நசுக்கும் முயற்சிகள் மத்திய அரசு ஈடுபடுவதாகவும் யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டினார்.

ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள மோடியும், அமித்ஷாவும் முயல்வதாகவும் அவர் விமர்சித்தார். பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, ஐதராபாத்தில் கவிஞர் வரவரராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக யஷ்வந்த் சின்ஹா சுட்டிக்காட்டினார். இதுபோன்ற அடக்குமுறை ஆட்சியினால், நாட்டில் அறிவிக்கப்படாத மறைமுக அவசரநிலை நிலவுகிறது என்றார்.

மேலும், வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை, மத்திய அரசு தங்கள் விருப்பம் போல இயக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

 

 

Related Posts