பாஜகவுக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் உணர்த்த வேண்டும்: கனிமொழி

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், வெள்ளப்பட்டி, மாபிள்ளையூரணி,தாளமுத்துநகர், சோட்டையன் தோப்பு, ஏ.பி.சி.கல்லூரி ஆகிய பகுதிகளில் இன்று  வாக்கு சேகரித்த அவர் பின்னர் மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்தியிலே நடைபெற்று கொண்டிருக்க கூடிய ஆட்சி விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை எனவும், ஸ்டெர்லைட்,ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.தமிழகத்தில் பாஜகவின் அடிமைகள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனவும், . திமுக ஆட்சி அமைந்ததும் கடல் அரிப்பை தடுக்க தூத்துக்குடியில் தூண்டில் வளைவு அமைக்ப்படும் எனவும், .  ஸ்டெர்லைட்  ஆலை மீண்டும் வராது என்றும் அவர் உறுதி அளித்தார். . பாஜகவுக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை வரும் தேர்தலில்  மக்கள் உணர்த்த வேண்டும் என்றும் நாடும் நமதே, நாற்பதும் நமதே எனவும் கனிமொழி தெரிவித்தார்.

Related Posts