பாஜகவை வளர்க்க அதிமுக துணை போகாது: தம்பிதுரை

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அதிமுக துணை போகாது என்று மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம்  தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கு பாளையம் பகுதியில் பொது மக்களிடம் மனுக்கள் பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களவைதுணைத் தலைவர்  தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,   ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கிறது என்றும்  அதேபோல், அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது என்றும் கூறினார். .காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்க பாஜக துணை நிற்கிறது என்றும் அதேசமயம் பாஜகவை வளர்க்க அதிமுக துணை போகாது என்றும் அவர் குறிப்பிட்டார். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் போது எதிர்ப்பது என்ற  அதிமுகவின் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தம்பிதுரை தெரிவித்தார். .

Related Posts