பாஜகாவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளதாக திருமுருகன் காந்தி குற்றம்சாட்டு

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதிக் கலவரம் ஒரு திட்டமிட்ட சதி எனவும்,  இந்த கலவரத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த  இந்து முன்னணி பொறுப்பாளர் ராஜசேகரன் தான் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருப்பதாகவும்  கூறினார் .

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வதொல் திருமாவளவனுக்கு பானை சின்னத்திற்கு வாக்களிப்பதை தடுக்கவே, அந்த கிராமத்தில் சாதிய மோதலை இந்துத்துவா அமைப்புகளும் பாட்டாளி மக்கள் கட்சியும் திட்டமிட்டு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

பாஜகாவுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளதாகவும் தற்போதுள்ள  தேர்தல் ஆணையர்கள் நேர்மையற்றவர்கள் எனவும் குற்றம்சாட்டிய அவர், பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றார் இதேபோல் கன்னியாகுமரியில் பாஜக தூண்டுதலின் பேரில் கிறிஸ்துவ மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டு இருப்பதாகவும்  அந்தப்பகுதியிலும் மறு தேர்தல் நடக்க வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

Related Posts