பாஜக அனைத்தையும் விலைக்கு வாங்க முடியாது – பிரியங்கா காந்தி

அனைத்தையும் விலைக்கு வாங்க முடியாது என்பதை பாஜக நிச்சயம் ஒருநாள் உணரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மீது நேற்று நடைபெற்ற  நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், , எதிராக 105 உறுப்பினர்க்களும் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதாதளம் -காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்தது.

இதுகுறித்து தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்தே உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும்,  தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் இது போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.   அவர்களின் பேராசை இன்று வெற்றி பெற்றுவிட்டது என்றும். இதனால் நேர்மை, ஜனநாயகம் மற்றும் கர்நாடக மக்கள் தோல்வியடைந்து விட்டதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்தையும் விலைக்கு வாங்க முடியாது என்பதை பாஜக நிச்சயம் ஒருநாள் உணரும் என்றும்  எல்லோரையும் அடக்க முடியாத நிலை ஏற்படும்போது,  அவர்களின் அனைத்து பொய்களும் வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.   அதுவரை  பல தியாகங்களுக்கு மத்தியில் போராடி ஏற்படுத்தப்பட்ட நாட்டின் ஜனநாயகம், அமைப்பு ஆகியவை அழிவதையும், ஊழல் தலைவிரித்தாடுவதையும் மக்கள் பொருத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts