பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன்    மோடி அரசை அகற்றுவது,இடதுசாரிகளை பலப்படுத்துவது, மதசார்பற்ற ஆட்சியமைப்பது ஆகிய முன்று குறிக்கோள்களை மையமாக வைத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை ,கோவை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதாகவும்,  18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  பல்வேறு கருத்து திணிப்புகள் நடைபெற்றாலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிப் பெறும் எனவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் மோடி அரசு  உச்சநீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் கைப்பாவையாக வைத்துள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Related Posts