பாஜக அரசை புரிந்து கொண்டார் தம்பிதுரை

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தற்போது பாஜக அரசை புரிந்து கொண்டிருப்பதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் இருக்கும் பாஜக அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் அந்தக் கட்சி ஆளாத  மாநில அரசுகளுக்கு சி.பி.ஐ.யை ஏவி அச்சுறுத்துவதாக தெரிவித்தார். தற்போது  மேற்கு வங்காளத்திலும்  அதைத்தான் செய்து வருகிறது எனவும், அதற்கு எதிராக மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருவதாகவும் கூறிய கனிமொழி, இது நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என்றார். மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தற்போது பாஜக அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருப்பதை சுட்டிக்காட்டி,  இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்  என்று கனிமொழி தெரிவித்தார்.

Related Posts