பாஜக கூட்டணியில் அதிமுக அரசு இல்லை

பாஜக கூட்டணியில் அதிமுக அரசு இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

                திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் வெற்றிடம் என்பது இல்லை எனவும், இந்த ஆட்சியை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் கூறினார். அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் துடிப்பதாகவும், அதனால் தான் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக – பாஜக இடையே எந்த உறவும், கூட்டணியும் கிடையாது என கூறிய அவர், மத்திய அரசுடன் மாநில அரசு நட்புடன் இருந்தால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நட்புடன் இருப்பதாக தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கமாட்டோம் என்று ஸ்டாலின் கூற முடியுமா என கேள்வி எழுப்பிய தம்பிதுரை, பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்து இந்த நாட்டை ஆள வைத்ததே தி.மு.க தான் என குற்றம் சாட்டினார்.

Related Posts