பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தேவையான நேரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தேவையான நேரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்களைத் தேடி அரசு என்ற வகையில், மக்களின் குறைகளை தாங்களே நேரடியாக வந்து கேட்டு, குறைகளை நிவர்த்தி செய்து வருவதாக கூறினார். பாஜக. தேசிய செயலாளர் எச்.ராஜா பொது வாழ்க்கையில் இருப்பவர் என்பதால், எடுத்தோம் கவிழ்த்தோம் என எதுவும் செய்திட முடியாது எனவும், தேவையான நேரத்தில் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு நல்ல தீர்ப்பை வழங்குவார் என எதிர்ப்பார்ப்பதாக கூறினார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவெடுத்து அறிவிப்பார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Related Posts