பாஜக பணக்காரர்களுக்காக பணியாற்றுகிறது: ராகுல் காந்தி

இந்தியாவில் வாழும் சில பணக்காரர்களுக்காக பாஜக பணியாற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதிவாசி ஏக்தா பரிஷத் என்ற பழங்குடியினருக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழங்குடியின மக்களின் உரிமைக்கான மசோதாவைக் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார். பணக்காரர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் என விரும்பும் பாஜக அரசு, ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், , பழங்குடியின மக்களுக்கான உரிமை மசோதா என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு அல்ல எனவும்,, அது அவர்களது உரிமை எனவும் கூறினார். பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் உள்ள நிலம், தண்ணீர், வனப்பகுதியின் மீது அவர்கள் உரிமை கொண்டவர்களாக இருப்பது அவசியம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Related Posts