பாடப்புத்தகத்தில் கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை

பாடப்புத்தகத்தில் கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை : ஜூன்-26

விடுதலைப்போராட்ட வீரர் ம.பொ.சிவஞானத்தின் 113வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள ம.பொ.சிவஞானத்தின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ம.பொ.சிவஞானத்தின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கிமு, கிபி என்பதற்கு பதிலாக பொதுஆண்டுக்கு முன்பு, பின்பு என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று கூறினார். மேலும், பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவர்கள் புறக்கணிப்பு என எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், ம.பொ.சிவஞானம் சிலைக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், ம.பொ.சிவஞானத்தின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Related Posts