பாதாம் பிசினியின் நன்மை குணங்கள்!

பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது.
தேவையான அளவு பாதம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் பாதாம் பிசின் ஜெல்லிபோல காணப்படும். இதனுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வருவதால், பல மருத்துவ பலன்களை பெறலாம்.

நெஞ்செரிச்சல்  செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும். பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் உடலில் தாது பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும்.

உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரகக் கல் போன்றவைகளை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.

நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.

ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.

பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

Related Posts