பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கலாம் : உச்சநீதிமன்றம்

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கும் முறை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் புகார் அளித்தாலே கைது செய்யக்கூடாது என்றும், தீவிர விசாரணைக்குப் பிறகே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்றம், புதிய உத்தரவை திரும்ப பெற்றது. எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் புகார் அளித்தாலே கைது செய்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Related Posts