பாதுகாப்புதுறை விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக பாதுகாப்புதுறை விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

            ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று பிற்பகல் செலுத்தப்பட்டது. இது வானில் பறந்த பான்ஷி ரக ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. மேலும், வானிலே பறந்து சென்று மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 7 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக, விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Related Posts