பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள பலி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் : மே-31

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள காசியாபாத் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சில தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Posts