பானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்  மோடி உறுதி 

மக்களவைத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள மாநிலங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி, சிக்கார் உள்ளிட்ட ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், இங்கு தேர்தல் பிரசாரத்திற்காக நாம் கூடிய உள்ள நிலையில் சில ஊர்களில் மக்கள் புயலையும், மழையையும் எதிர் கொண்டு உள்ளனர் என்றார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து தேவையான உதவிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

புயல் பாதிப்பு ஏற்படும் முன்னரே ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியதை அவர் சுட்டிக் காட்டினார். தேசிய பேரிடர் மேலாண்மை மையம், இந்திய கடலோர காவல் படை,  ராணுவம், கடற்படை, விமானப்படை  என அனைத்து படைகளையும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்யும் என்ற அவர், துயர் துடைக்கும் பணியை மத்திய அரசு முன்னின்று நடத்தும் என்றார்.

 

Related Posts