பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் : முதலமைச்சர்

பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நாளை முதல் செப்டம்பர் 9 – ம் தேதி வரை ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில், கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும், 24 ஆயிரத்து 90 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Related Posts