பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சமுதாயத்தை மறந்து விட்டதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்


சென்னை அரும்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.கடந்த 11 ஆண்டு கால மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒருமுறை கூட வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை குறித்து, பாமக வாய் திறக்கவில்லை என சாடினார்.  தற்போது வன்னிய இளைஞர்கள் விழித்து கொண்டதாகவும், அவர்களுக்கான உரிமைகள், சமூக நீதிகளை பெற்றிட அறவழியில் போராட, அணி திரண்டு விட்டதாகவும், வேல்முருகன் தெரிவித்தார்.

Related Posts