பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு:  பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள்  தீவிர சோதனை

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 9 இடங்களில் கடந்த 21- ந்தேதி  வெடிகுண்டு வெடித்ததில் 250க்கும் மேற்ப்பட்டோர்  உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த  சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்நிலையில், பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடாக டி.ஜி.பி க்கு  கிடைத்த  தகவல் குறித்து  தமிழக காவல்துறை தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து.  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார்,  மோப்ப நாய் உதவியுடன்   பாம்பன் ரயில் மற்றும்  சாலை பாலங்களில்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  சாலை பாலத்தை கடக்கும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள், அரசு பேருந்துகளை தீவிர சோதனைக்கு பிறகே பயணத்தை தொடர அனுமதித்தனர்.ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் இரயில்கள் சோதனைக்குப்பின் இராமேஸ்வரம் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன.

Related Posts