பாரதியாரின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பாரதியாரின் 137ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாகவி பாரதியாரின் 137ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த  திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ,பெஞ்சமின்  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மொழியையும் நாட்டையும் தன் இரு கண்களை போல் பாவித்தவர் பாரதியார் எனவும்,  அவர், மறைந்தாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனவும்  புகழாரம் சூட்டினார். நாடளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தேர்தல் அறிவித்த பின் தான் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும் என்றார்.

இதேபோல், பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பாரதியாரின் அனைத்து கவிதைகளும் பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடந்து பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெண் அடிமைத்தனம், சாதியம் ஒழிய வேண்டும் என பாடுபட்டவர் பாரதி என புகழாரம் சூட்டினார். சென்னை மெரினா கடற்கரைக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் எனவும்,  மெரினாவை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Posts