பாரதிய ஜனதாவால் எதையும் கட்ட முடியாது, இடிக்கத்தான் முடியும் : ராகுல்காந்தி குற்றம்சாட்டு

பாரதிய ஜனதாவால் எதையும் கட்ட முடியாது, இடிக்கத்தான் முடியும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டிவிட்டரில் இதனை பதிவிட்டுள்ள அவர்,  பாரதிய ஜனதா அரசால் எதையும் கட்ட முடியாது, மாறாக ஆர்வத்துடன், கடின உழைப்பால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவற்றை இடிக்க மட்டுமே முடியும் என குறிப்பிட்டுள்ளார். காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதில் இருந்து நாட்டில் தொழில் செய்வோர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம் எனவு அவர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் குறித்து லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன தலைவர் ஏ.எம்.நாயக் கூறிய கருத்து, ஊழியர்களை குறைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டிருப்பது, ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருவது ஆகியவை குறித்து பல்வேறு மீடியாக்களில் வெளியான செய்திகளின் தலைப்புக்களை பதிவில் அவர் இணைத்துள்ளார்.

 

 

Related Posts