பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கிராமிய கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான ஒயிலாட்டத்தை, தற்போது கொங்கு மண்டல மக்கள் ஆர்வமுடன் கற்று அறங்கேற்றம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவில் 22 வது ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் 3 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் சிறியவர்கள் என 60 பேர் அரங்கேற்றம் செய்தனர். கிராமிய பாடலுடன் மெதுவாக ஆரம்பித்து வேகமெடுக்கும் ஒயிலாட்டம் தொடர்ச்சியாக 3 மணி நேரம் நடைபெற்றது.

உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைந்து ஆடும் ஒயிலாட்டத்தால் புத்துணர்வு ஏற்படுவதாக கலைஞர்கள் கூறுகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயிலும் கலைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசு இட ஒதுக்கீடு தந்தால் தமிழர்களின் பாரம்பரிய கலையை மேலும் வளர்க்க முடியும் என கிராமிய கலைஞர்கள் வலியுறுத்தினர்.

 

Related Posts