பாரூர் ஏரியில் இருந்து வரும் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க உத்தரவு

விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று பாசனத்துக்காக பாரூர் ஏரியில் இருந்து வரும் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில், தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : ஜூன்-28

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக சாகுபடிக்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து வரும் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts