பார்வையாளர்களை கவரும் மதுரை ரயில் நிலையம்

மதுரை ரயில் நிலைய முகப்பு பகுதியில் வடிவமைக்கப்பட்டுள்ள கலை வண்ணம் மிக்க சிற்பங்கள், வண்ண விளக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நாட்டின் இரண்டாவது அழகிய ரயில் நிலையம் என்ற பெயரை கடந்த ஆண்டு பெற்ற மதுரை ரயில் நிலையம், இந்த முறை முதலிடத்தைப் பிடிக்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மதுரை கோட்டம் சார்பில் சுமார் பத்து கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரயில் நிலையத்தை அழகுப் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில் நிலைய முகப்பு பகுதியில் கலை வண்ணம் மிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, அவை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளன. இது மதுரை ரயில் நிலையம் வரும் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Posts