பாலாற்றில் தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தி பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்

வேலூர் சதுப்பேரியின் நீர் வரத்திற்காக பாலாற்றில் தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தி, பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக இருக்கும் சதுப்பேரிக்கு பாலாற்றிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது. பாலாற்றின் தடுப்புச் சுவர் சேதமடைந்து, நீர்வரத்து கால்வாய்களும் பராமரிப்பின்றி புதர் மண்டிகிடப்பதால், ஏரிக்கு தண்ணீர் திருப்பி விட முடியாத நிலை உள்ளது. இதனால் வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இது குறித்து பல முறை பொதுப்பணித்துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், கோரிக்கைகளை முன்வைத்து பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர், அரசினர் உயர்நிலைப்பள்ளியிலிருந்து, அப்துல்லாபுரம் ஐடி.ஐ தொழிற்பயிற்சி நிலையம் வரையில் மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

Related Posts