பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும்: செங்கோட்டையன்

 

 

முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை, ஏப்ரல்-04 

கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2 ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.  

Related Posts