பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

 மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

                பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மீ டூ இயக்கம் மூலம் தைரியமாக கூறி வருகின்றனர். இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

                இதில், நடிகர் அர்ஜுன், சுசி கணேசன், தியாகராஜன், வைரமுத்து உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது.

                இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில்,  மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும்போது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளதாகவும் அவர்  பதிவிட்டுள்ளார்.

Related Posts