வன்புணர்வு தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் – வாக்குமூலம் கொடுத்த மாணவி

சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியுள்ள அந்த மாணவிக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் மதுரையை சேர்ந்த உதவி பேராசிரியர் ஒருவர், இரவு நேரங்களில் விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதை தாங்க முடியாத மாணவி இதுபற்றி விடுதி பெண் காப்பாளர்களிடம தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் உதவி பேராசிரியர் சொல்கிறபடி கேட்டால் பெரிய ஆளாகி விடலாம் என்று கூறியதுடன் உதவி பேராசியருக்காக மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் பொறுமையிழந்த மாணவி சென்னையில் உள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வாழவச்சனூர் விரைந்து சென்று கிராம மக்களிடம் மகளின் நிலைகுறித்து தெரிவித்தார். மாணவிக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கல்லூரியை முற்றுகையிட்டு முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர்  வேளாண் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே மாணவி இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் பாலியல் புகார் குறித்து வாக்குமூலம் அளித்தார்

Related Posts