பாலியல் புகார்களை விசாரிக்க  விசாரணைக் குழு – மேனகா காந்தி

      பாலியல் புகார்களை விசாரிக்க அரசியல் கட்சிகள்  உள் விசாரணைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று   மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்த்தில்,’மீ டூ’ என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் எம்.ஜே. அக்பர்,. ஊடகத் துறையில் தீவிரமாக இயங்கியபோது பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில் மீ டு பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாலியல் புகார்களை விசாரிக்க உள் விசாரணைக் குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள் எனவும், அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என  நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Posts