பால் உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே பால் விலை அதிகரிப்பு

பால் உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார். பால்வளத்துறை அதிக லாபத்தில் இயங்கி கொண்டிருப்பதாக, அத்துறைக்கான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார், ஆனால் ஆனால் முதலமைச்சர் பழனிசாமியோ பால்வளத்துறை நஷ்டத்தில் இயங்குகிறது, அதனால்தான் பால்விலையை உயர்த்தினோம் என்கிறார், அவர்களுக்குள்ளேயே முரண்பாடு உள்ளது என அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை மறைக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தாம் கருதுவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

Related Posts