பால் உற்பத்தியாளர் நலன் கருதியே விலை ஏற்றப்பட்டதாக – அமைச்சர் ஜெயக்குமார்

பால் உற்பத்தியாளர் நலன் கருதியே விலை ஏற்றப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். பால் உற்பத்தியாளர்களுக்கு, கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கிற தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே, பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னதாக அரசு அலுவலகங்களில், பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது. இதனை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.

Related Posts